அர்ச்சுனா எம்.பி மீதான வழக்கு - நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன் வாகன விபத்தை ஏற்படுத்தி, சாரதியை தாக்கி பலத்த காயங்களை ஏற்படுத்திய சம்பவம் தொடர்பான வழக்கின் பிரதிவாதி தரப்பு சாட்சிகளை விசாரிப்பதற்கான அடுத்த கட்ட விசாரணை எதிர்வரும் நவம்பர் 10 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மேலதிக நீதிபதி நுவன் கௌசல்ய நேற்று (17) இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.
பிறப்பிக்கப்பட்ட உத்தரவு
கடந்த 2021 ஆம் ஆண்டு கொழும்பு பேஸ்லைன் வீதியில் (Baseline Road) ஏற்பட்ட வாகன விபத்தொன்றை அடுத்து, ஒருவரை தாக்கி பலத்த காயங்களை ஏற்படுத்தியதாக இந்த வழக்கு பதியப்பட்டது.
இந்த வழக்கில் முன்னதாக நீதிமன்றத்தில் முன்னிலையாகத் தவறியதால், அர்ச்சுன ராமநாதனுக்கு எதிராக கொழும்பு மேலதிக நீதிபதியால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இதன்பின்னர் அவர் சட்டத்தரணி ஊடாக முன்னிலையானதை தொடர்ந்து அந்த பிடியாணை நீதிமன்றத்தால் திரும்பப்பெறப்பட்டது.
இதற்கமைய, வழக்கின் பிரதிவாதி தரப்பு சாட்சிகளை விசாரிப்பதற்கான அடுத்த கட்ட விசாரணை எதிர்வரும் நவம்பர் 10 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.