கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து அலி சப்ரி ரஹீம் எம்.பி அதிரடியாக கைது

Bandaranaike International Airport Gold
By Fathima May 23, 2023 10:16 AM GMT
Fathima

Fathima

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் கைது செய்யப்பட்டுள்ளார்.

புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான அவர் சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த போது கைதாகியுள்ளதாக தெரியவருகிறது. 

தங்கத்துடன் கைது

3.5 கிலோகிராம் தங்கத்துடன் அவர் சுங்கப் பிரிவினரால் கைது செய்யப்பட்டதாக விமான நிலைய தகவல்களை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன. 

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து அலி சப்ரி ரஹீம் எம்.பி அதிரடியாக கைது | Mp Ali Sabri Raheem Detained In Airport With Gold

மேலும், அவர் தற்போது சுங்கப் பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரியவருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

நாடாளுமன்றில் தெரிவிக்கப்பட்ட கருத்து

இந்த விடயம் தொடர்பில் சற்றுமுன் நாடாளுமன்றத்திலும் பேசப்பட்டுள்ளது. இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்சன ராஜகருணா தெரிவிக்கையில், விமான நிலையத்தில் புத்தளம் நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் தங்கத்துடன் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் மூலமாக அறியக்கூடியதாக உள்ளதுடன் எமக்கும் குறுஞ்செய்தி கிடைத்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் முறையான விசாரணைகள் நடத்தப்பட்டு தக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

இவ்வாறான விடயங்கள் காரணமாக தான் அரசியல்வாதிகள் எல்லோரின் மீதும் சேறு பூசப்படுகிறது என கோரிக்கை முன் வைத்துள்ளார்.

இவரை தொடர்ந்து உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஹர்சன ராஜகருணாவின் கோரிக்கையை தாமும் ஆமோதிப்பதாக சுட்டிக்காட்டியுள்ளார்.