காலியில் தொடருந்து விபத்தில் மூவர் பலி்

Galle Sri Lanka Accident Death
By Fathima May 24, 2024 05:17 AM GMT

காலி, புஸ்ஸ, பிந்தலிய சந்தியில் உள்ள பாதுகாப்பு கடவையில் மோட்டார் சைக்கிள் ஒன்று ரயிலுடன் மோதி இடம்பெற்ற கோர விபத்தில் மூன்று இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.

மருதானையில் இருந்து மாத்தறை நோக்கி பயணித்த ரயிலில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விபத்து 23 ஆம் திகதி வியாழக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாதுகாப்பற்ற முறையில்  பயணம்

விபத்தில் உயிரிழந்த மூன்று இளைஞர்களும் 17 முதல் 19 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

காலியில் தொடருந்து விபத்தில் மூவர் பலி் | Motorcycle Collides With Train Three Killed

எனினும் மூன்று பேர் பாதுகாப்பற்ற முறையில் மோட்டார் சைக்கிளில் பயணம் மேற்கொண்டுள்ளதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

குறித்த கடவையில் உரிய முறையில் சமிஞ்சை செயற்படவில்லை என நேரில் பார்த்த பொது மக்கள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.