மாத்தளையில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழப்பு

Kurunegala Matale Puttalam Accident
By Aadhithya Jul 02, 2024 09:29 AM GMT

கலேவெல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏ 06 வீதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று வீதித் தடுப்பில் மோதி இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

குருநாகலையில் இருந்து தம்புள்ளை (Dambulla) நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

மோட்டார்சைக்கிள் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த நிலையிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது. 

இருவர் உயிரிழப்பு

விபத்து இடம்பெற்ற போது மோட்டார் சைக்கிளில் மூவர் பயணித்துள்ளதாகவும், பின்னால் பயணித்த ஒருவர் படுகாயமடைந்த நிலையில் தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். 

மாத்தளையில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழப்பு | Motor Accident Matale One Two Dead

மேலும், லக்கல மற்றும் மாத்தளை பிரதேசத்தில் வசித்து வந்த 29 மற்றும் 40 வயதுடைய இருவரே விபத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW