இரண்டு பிள்ளைகளின் தாய் கொலை: விசாரணையில் சிக்கிய கைத்தொலைபேசி

Sri Lanka Police Colombo
By Dhayani Mar 31, 2024 01:45 PM GMT

கடுவெல, கொத்தலாவல, பட்டியாவத்த பகுதியில் உள்ள வீடொன்றில் தனியாக இருந்த இரண்டு பிள்ளைகளின் தாயொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

கடுவெல, கொத்தலாவல, பட்டியவத்த பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய அஜந்தா கடுகம்பால என்ற இரண்டு பிள்ளைகளின் தாயே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த கொலை சம்பவம் தொடர்பில் உயிரிழந்த பெண்ணின் மருமகன் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கடுவெல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இரண்டு பிள்ளைகளின் தாய் கொலை: விசாரணையில் சிக்கிய கைத்தொலைபேசி | Mother Of Two Murdered 

இதன்போது கைது செய்யப்பட்ட சந்தேகநபரின் மருமகன் கொலையுண்ட பெண்ணின் வீட்டிற்கு அடிக்கடி வருபவர் எனவும், மற்றைய சந்தேகநபர் பிரதான சந்தேகநபரின் வீட்டிற்கு திருத்த வேலைக்காக வந்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து சந்தேகநபர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் கொலை செய்யப்பட்ட இரண்டு பிள்ளைகளின் தாயின் கைத்தொலைபேசி கண்டெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த பெண் கொலை செய்யப்பட்ட தினத்தன்று அவரது கணவரும் இரண்டு குழந்தைகளும் வேலைக்குச் சென்றுள்ளமையும் விசாரணையில் தெரியவந்துள்ளது.