நிந்தவூரில் நடைமுறைக்கு வந்த தாய் - சேய் நலத்திட்டம்

Sri Lanka Sri Lankan Peoples Eastern Province Kalmunai Nintavur
By Rakshana MA Dec 02, 2024 05:11 AM GMT
Rakshana MA

Rakshana MA

நிந்தவூர் பிரதேச செயலகம் மற்றும் பொது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் பரிந்துரையின்படி சுமார் 1 மில்லியன் பெறுமதியான தாய்-சேய் நலத்திட்டமானது சமூக, பொருளாதார மற்றும் கல்வி அபிவிருத்திக்கான அமைப்பின் (OSEED) ஏற்பாட்டில்  வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வானது நேற்று(01) மாலை நிந்தவூர் பிரதேச பொது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த திட்டத்தின் மூலம் அண்மையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒரு வயதுக்குக் குறைவான குழந்தைகளைக் கொண்ட 100 குடும்பங்களும், பொருளாதார ரீதியில் பின்தங்கிய 50 குடும்பங்களும், மொத்தமாக 150 குடும்பங்கள் உதவிபெற்றன.

மின்சாரக் கட்டணம் குறித்து அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பு

மின்சாரக் கட்டணம் குறித்து அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பு

வலுப்பெற்றுள்ள ஒற்றுமை

இந்நிகழ்வானது தனியார் அமைப்பொன்றின் ஸ்தாபகத் தலைவர், சட்ட முதுமாணி மற்றும் சர்வதேச விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் பதிவாளர் பி.ரி.ஏ.ஹசனின்  தலைமையில் நடைபெற்றது.

இதில் சிறப்பு அதிதியாக நிந்தவூர் பிரதேச பொது சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் கே.எல்.எம். றயீஸ் , பிரதம அதிதியாக நிந்தவூர் பிரதேச செயலாளர் சட்டத்தரணி ஏ.எம். அப்துல் லதீப் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிந்தவூரில் நடைமுறைக்கு வந்த தாய் - சேய் நலத்திட்டம் | Mother Child Welfare Program Launched At Nintavur

மேலும், நிந்தவூர் பெரிய ஜும்மா பள்ளிவாசல் தலைவர் , அந்த தனியார் அமைப்பின் நிறைவேற்று குழு உறுப்பினர்கள் மற்றும் அங்கத்தவர்கள் உள்ளிட்ட பலரின் பங்குபற்றுதலால் நிகழ்வு சிறப்பிக்கப்பட்டது.

அத்துடன் குறிப்பிட்ட அமைப்பின் 25ஆம் ஆண்டு பூர்த்தி விழாவை முன்னிட்டு நடைபெற்ற இந்நிகழ்வில் அமைப்பின் செயலாளர் எம்.ஏ.எம். முர்ஷித் நிகழ்ச்சியை தொகுத்தளித்தார்.

மேலும், இந்த விழாவினால் சமூக நலத்திற்கான தனியார் அமைப்பின் அர்ப்பணிப்பும், நிந்தவூர் பிரதேசத்தின் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களிடையேயான ஒற்றுமையும் மேலும் வலுப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பெரிய வெங்காயத்திற்கான பண்ட வரியினை குறைக்க நடவடிக்கை

பெரிய வெங்காயத்திற்கான பண்ட வரியினை குறைக்க நடவடிக்கை

வானிலையில் இன்று ஏற்படவுள்ள மாற்றம்

வானிலையில் இன்று ஏற்படவுள்ள மாற்றம்

    நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW


GalleryGalleryGallery