வெளிநாட்டிலிருந்து இலங்கை வந்த இருவருக்கு குரங்கம்மை தொற்று

Bandaranaike International Airport Dubai Monkeypox
By Fathima Jun 07, 2023 07:55 AM GMT
Fathima

Fathima

வெளிநாட்டிலிருந்து இலங்கை வந்த இருவர் குரங்கம்மை தொற்றுக்கு இலக்கான நிலையில் கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு இன்று தெரிவித்துள்ளது.

வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பிய தாய் மற்றும் மகளே இவ்வாறு குரங்கம்மை தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

டுபாயில் இருந்து வருகை தந்த இவர்கள் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த போது மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது அவர்களுக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. 

தொற்றுக்கு உள்ளானவர்கள் தற்போது தொற்று நோய் வைத்தியசாலையில் (IDH) சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.