குரங்கம்மை நோய் தொடர்பில் மக்களுக்கான அறிவிப்பு
Sri Lanka
Sri Lankan Peoples
Monkeypox
Monkeypox virus
By Fathima
இலங்கையில் குரங்கம்மை நோய் தொடர்பில் பதில் பிரதான தொற்றுநோய் வைத்திய நிபுணர் சமித்த கினிகே அறிவிப்பொன்றை விடுத்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், குரங்கம்மை தொற்று நோய் குறித்து சமூகத்தில் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்தக் கூடாது.
அண்மையில் மேலும் இருவருக்கு குரங்கம்மை தொற்று ஏற்பட்டிருந்த நிலையில் நாட்டினுள் கண்டறியப்பட்டுள்ள குரங்கம்மை நோயாளர்களின் எண்ணிக்கை நான்காக அதிகாித்துள்ளது.
குரங்கம்மை தொற்று நோய் ஒருவரிடம் இருந்து பிரிதொருவருக்கு பரவுவது மிகவும் அரிதாகவே காணப்படுகிறது.
எனவே அது தொடர்பில் அச்சம் கொள்ள தேவையில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.