இரகசியமான முறையில் விற்பனை செய்யப்பட்ட நீர்ப்பங்கு: வெளியான தகவல்
கிளிநொச்சியில் விவசாயி ஒருவருக்கு சொந்தமான ஒன்பது ஏக்கர் சிறுபோக நீர் பங்கு, சட்டத்திற்கு முரணான முறையில் இரகசியமாக விற்பனை செய்யப்பட்டமை கண்டறியப்பட்டுள்ளது.
குறித்த நீர்ப்பங்கு கிளிநொச்சி இரணைமடு குளத்தின் கீழான புலிங்க தேவன் முறிப்பு கமக்கார அமைப்பின் தலைவரால் மூன்று இலட்சத்து ஆறுபதாயிரம் ரூபாவிற்கு கமக்கார அமைப்புக்கு விற்பனைசெய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட விவசாயினால் நேற்று (12-06-2023) கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் பிரதி ஆணையாளரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

விவசாயியின் பங்கு உரிமை
குறித்த பகுதியில் சுமார் 40 வருடங்களுக்கு மேலாக பயிர்செய்கை மேற்கொண்டு வந்த விவசாயியின் பங்கு உரிமை சிறுபோகத்தில் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான மோசடிகளின் பின்னணியில் சில அதிகாரிகளும் இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதுமட்டுமன்றி குறித்த பிரதேசத்தில் இருந்து விவசாயிகளிடம் நிறுத்தப்பட்ட சுமார் 43 வரையான சிறுபோக நீர் பங்குகள் கமநல சேவை நிலையங்களின் எந்த ஒரு அறிவுறுத்தல்களும் இன்றி தன்னிச்சையான விதத்தில் சின்ன காடு கமக்கார அமைப்புக்கு மாற்றம் செய்யப்பட்டிருக்கின்றது.