லங்கா சதொச நிறுவனத்திற்கு ஏற்பட்டுள்ள பெருந்தொகை நட்டம்!
லங்கா சதொச நிறுவனத்திற்கு 2021 டிசம்பர் 31 ஆம் திகதி வரை 1500 கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக கோப் குழு தெரிவித்துள்ளது.
2022 ஆம் ஆண்டு அந்த நிறுவனத்திற்கு ஏற்பட்ட நட்டம் அறுபது கோடி ரூபா எனவும் கோப் குழு தெரிவித்துள்ளது.
2014-2015 ஆம் ஆண்டு காலப்பகுதியில் லங்கா சதொச நிறுவகத்தின் ஊடாக அரிசி இறக்குமதி செய்யப்பட்டதன் காரணமாக 6 பில்லியன் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் அந்த குழு தெரிவித்துள்ளது.
மேலும், மனித பாவனைக்காக கொண்டு வரப்பட்டு கால்நடை தீவனத்திற்காக விற்பனை செய்யப்பட்ட அரிசியின் கையிருப்பு காலாவதியானதால் இந்த நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் இது தொடர்பில் மேலும் கலந்துரையாட கோப் குழு தீர்மானித்துள்ளதுடன், லங்கா சதொச நிறுவனத்திற்கு பொருத்தமான வர்த்தக மாதிரி ஒன்றை தயாரித்து அதனை இலாபகரமானதாக மாற்ற வேண்டியதன் அவசியத்தையும் குழு சுட்டிக்காட்டியுள்ளது.