கனடாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடி

Canada Crime Branch Criminal Investigation Department Crime Foreign Employment Bureau
By Shalini Balachandran Jul 15, 2024 11:15 AM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

கனடாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணத்தை மோசடி செய்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த கைது நடவடிக்கை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின்  விசேட புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மோசடி சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், பொரளை பிரதேசத்தில் இயங்கும் நிறுவனம் ஒன்று கனடாவில் நிதித்துறையில் தொழில் வழங்குவதாக கூறி 10 இலட்சம் ரூபாவை பெற்றுக்கொண்டுள்ளனர்.

அதிகாரிகள் சோதனை

எனினும் வாக்குறுதியளித்தபடி வேலை வழங்கவில்லை என நபர் ஒருவர் பணியகத்திற்கு செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

அதன்படி, சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் விசாரணை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

கனடாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடி | Money Fraud Job In Canada

குறித்த நிறுவனம் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் செல்லுபடியாகும் அனுமதிப்பத்திரம் இன்றி நடத்தப்பட்ட சட்டவிரோத வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் என விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

இதன்படி, குறித்த நிறுவன உரிமையாளர் உட்பட மேலும் ஒருவரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய பின்னர், 10 இலட்சம் ரூபா பிணையில் விடுவிக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.  

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW