ஆரம்பமானது மொய்தீன் பாய் ஆட்டம்.. வைரலாகும் ரஜினி போஸ்டர்

Indian Actress
By Nafeel May 08, 2023 03:40 PM GMT
Nafeel

Nafeel

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘லால் சலாம்’. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது ‘லால் சலாம்’ படத்தை இயக்கி வருகிறார். இதில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார். இப்படம் 2023-ஆம் ஆண்டு வெளியாகவுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

‘லால் சலாம்’ படத்தின் படப்பிடிப்பிற்காக நடிகர் ரஜினிகாந்த் சமீபத்தில் மும்பைக்கு புறப்பட்டு சென்றார்.

இந்நிலையில் ‘லால் சலாம்’ படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது. அதில், நடிகர் ரஜினிகாந்த், மொய்தீன் பாய் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், ‘சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக’ என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டரை ரசிகர்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.