பிரதமர் மோடிக்கு ஓமன் நாட்டவரால் வழங்கபட்ட கெளரவம்!
இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு ஓமன் நாட்டின் உயரிய விருதான ‘ஆர்டர் ஆப் ஓமன்’ என்ற விருது வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளது.
இருதரப்பு உறவை வலுப்படுத்த பிரதமர் மோடி அளித்த பங்களிப்பை கெளரவிக்கும் வகையில், ஓமன் சுல்தான் ஹைதம் பின் தாரிக் இவ்விருதை பிரதமருக்கு வழங்கியுள்ளார்.
விருது வழங்கி கெளரவிப்பு
2 நாள் பயணமாக பிரதமர் மோடி ஓமன் நாட்டுக்கு சென்றுள்ளார். அவருக்கு இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு அளித்ததுடன் பிரதமர் மோடி முன்னிலையில் இந்தியா-ஓமன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதனை தொடர்ந்து, இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு ஓமன் நாட்டின் உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் 28 வெளிநாடுகளின் உயரிய விருதுகளை பிரதமர் மோடி பெற்றுள்ளார்.
சமீபத்தில், அவருக்கு எத்தியோப்பியா, குவைத் ஆகிய நாடுகளின் உயரிய விருதுகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.