களுவாஞ்சிகுடியில் விசேட நடமாடும் சேவை: பொதுமக்களுக்கு அழைப்பு(Photos)

Batticaloa Eastern Province Srilankan Tamil News
By Fathima Aug 09, 2023 02:23 PM GMT
Fathima

Fathima

மட்டக்களப்பு - மண்முனை தென் எருவில்பற்று, களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்தினால் 40 வயதிற்கு மேற்பட்டடோருக்கான பிறப்பு சான்றிதழ், அடையாள அட்டையினை பெற்றுக்கொடுக்கும் நடமாடும் சேவையானது இடம்பெற்றுள்ளது.

குறித்த சேவையானது பிரதேச செயலாளர் சிவப்பிரியா வில்வரெத்னத்தின் தலைமையில் இன்று (09.08.2023) பிரதேச செயலக ஒன்றுகூடல் மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.

பயனடைந்த மக்கள்

இந்நிலையில் பிறப்பு சான்றிதழ் இல்லாத காரணத்தினால் இதுவரை தேசிய அடையாள அட்டை பெற்றுக்கொள்ளாத மக்கள் தொடர்பில் ஆட்களை பதிவு செய்யும் திணைக்களத்தால் வெளியிடப்பட்ட 2023.12.31ஆம் திகதியை இறுதி தினமாக கொண்ட சுற்றறிக்கைக்கு அமைவாக குறித்த நடமாடும் சேவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

களுவாஞ்சிகுடியில் விசேட நடமாடும் சேவை: பொதுமக்களுக்கு அழைப்பு(Photos) | Mobile Service Reservation Services Kaluwanchigudi

மேலும், இரண்டு கட்டங்களாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நடமாடும் சேவையானது, இன்றைய தினம் முதலாம் கட்டமாக மாங்காடு சமுர்த்தி வலயத்திற்குட்பட்ட பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை கல்லாறு மற்றும் எருவில் வலயங்களுக்குட்பட்ட பொதுமக்களுக்குமாக இந்த நடமாடும் சேவை இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

GalleryGalleryGalleryGalleryGalleryGallery