கையடக்க தொலைபேசியின் விலை தொடர்பில் வெளியான தகவல்
Central Bank of Sri Lanka
Sri Lanka Economic Crisis
Sri Lankan Peoples
Economy of Sri Lanka
By Fathima
கையடக்க தொலைபேசிகள், குளிர்சாதனப் பெட்டிகள், மின் விசிறிகள், பழங்கள் போன்ற அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதற்கு விதிக்கப்பட்டுள்ள விதிகள் தளர்த்தப்படவுள்ளன.
இதனடிப்படையில் எதிர்காலத்தில் கையடக்க தொலைபேசிகளின் விலை குறையும் என தகவல் வெளியாகியுள்ளது.
பொருட்கள் இறக்குமதி

குறிப்பாக பணவீக்கம் மற்றும் கையடக்க தொலைபேசிகளின் இறக்குமதி மீதான கட்டுப்பாடுகள் காரணமாக, கையடக்க தொலைபேசிகளின் விலை வேகமாக அதிகரித்தது.
843 வகையான பொருட்களை இறக்குமதி செய்வதற்கான பண வரம்பு தேவையை நீக்குவதாக மத்திய வங்கி இன்று(01.06.2023) அறிவித்துள்ளது.
அதாவது அந்த பொருட்களின் மொத்த மதிப்புக்கான பண வைப்பு வரம்பை நீக்குவதாக அறிவித்துள்ளது.