தொலைபேசிகளை அத்தியாசிய பொருட்களாக அறிவிக்குமாறு கோரிக்கை
தொலைபேசிகளை அத்தியாவசிய பொருட்களாக அறிவிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சந்தையில் தொலைபேசிகளின் விலைகள் பாரியளவில் அதிகரித்துள்ளதாகவும் இதனால் அவற்றினை அத்தியாவசிய பொருட்களாக அவறிவிக்க வேண்டுமெனவும் அகில இலங்கை தொலைதொடர்பு நிறுவன உரிமையாளர்கள் சங்கம் கோரியுள்ளது.
கோரிக்கை
சங்கத்தின் தலைவர் இந்திரஜித் பெரேரா இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
தொலைபேசிகளின் விலைகள் 300 முதல் 400 வீதம் வரையில் அதிகரித்ததுடன் தற்பொழுது குறைவடையும் பொழுது 30 முதல் 35 வீதத்தினால் மட்டுமே குறைவடைந்துள்ளது என தெரிவித்துள்ளார்.
தொலைபேசி விலைகள் குறைவடைது திருப்தி அளிக்கும் வகையில் இல்லை எனவும் இது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
தொலைபேசிகளின் விலை
தொலைபேசிகளின் விலைகளை நன்றாக குறைக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தொலைபேசி விலை அதிகரிக்கும் போது அவற்றை மக்கள் கொள்வனவு செய்ய மாட்டார்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே தொலைபேசிகளை அத்தியாவசிய பண்டங்களில் ஒன்றாக அரசாங்கம் அறிவிக்க வேண்டுமென இந்திரஜித் கோரியுள்ளார்.