போதைப்பொருள் பாவனையை கண்டறிய நடமாடும் பேருந்து சேவை!

Bimal Rathnayake Drugs Sri Lanka Transport Board
By Fathima Nov 25, 2025 09:22 AM GMT
Fathima

Fathima

போதைப்பொருள் பயன்பாட்டை கண்டறிய நடமாடும் சோதனைப் பேருந்து ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பயணிகள் பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களிடையே போதைப்பொருள் பயன்பாட்டை கண்டறிவதற்காக இந்த சேவை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

நடமாடும் பேருந்து

தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தால், போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில், நேற்று (24.11.2025) மாக்கும்புர பல் போக்குவரத்து மையத்தில் இந்த சேவை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

போதைப்பொருள் பாவனையை கண்டறிய நடமாடும் பேருந்து சேவை! | Mobile Bus To Check Drugs

இந்த நடமாடும் பேருந்து, தீவு முழுவதும் பயணிகள் பேருந்துகளில் பணிபுரியும் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களை தேர்ந்தெடுத்து சோதனைகளை நடத்தும்.

பணியில் இருக்கும்போது எந்தவொரு ஊழியரும் போதைப்பொருளுக்கு ஆளாகியுள்ளாரா என்பதை தீர்மானிக்க இந்த சோதனைகள் உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல் கட்டத்தில் பயணிகள் பேருந்துகளின் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் மீது கவனம் செலுத்தப்படும்.

பின்னர் பிற வாகனங்களின் ஓட்டுநர்களுக்கும் சோதனைத் திட்டத்தை விரிவுபடுத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.