இலங்கையில் தரமற்ற சவர்க்காரங்களால் சிறுவர்களுக்கு ஆபத்து
தரமற்ற சவர்க்காரம் பயன்படுத்துவதால் சிசுக்களின் தோலில் பல்வேறு உபாதைகள் ஏற்பட்டுள்ளதாக அரச குடும்ப சுகாதார சேவைகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், தற்போதைய பொருளாதார நிலை காரணமாக சில பெற்றோர்கள் இன்று குழந்தைகளுக்கு தரமற்ற குழந்தை சவர்க்காரத்தினை பயன்படுத்துவதாகவும், அதன் விளைவு எதிர்காலத்தில் ஏற்படும் எனவும் அதன் பொருளாளர் பிரியங்கனி சுசங்கிகா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “இந்நாட்களில் குழந்தைகளுக்கு சில ஒவ்வாமைகள் நிலவுவதாக எமக்கு அறியக்கூடியதாக உள்ளது.
பொருளாதார சூழ்நிலை
இதை ஆராய்ந்தபோது ஒரு விஷயம் புரிந்தது, தரமற்ற குழந்தை சவர்க்காரத்தினை பயன்படுத்துவதால் இந்த நிலை ஏற்படுகிறது.
குறிப்பாக, தாய்மார்கள் குழந்தைகளுக்கான சவர்க்காரத்தினை பயன்படுத்தும் போது மிகவும் அவதானமாக இருக்க வேண்டிய விடயம் இலங்கை தர நிர்ணய நிறுவனத்தினால் வழங்கப்பட்ட சான்றிதழுடன் கூடிய குழந்தை சவர்க்காரத்தினை பயன்படுத்துவதேயாகும்.
குழந்தையின் தோல் மிகவும் உணர்திறன் வாய்ந்த இடம். எனவே இன்றல்ல பல வருடங்களில் இதன் பலன் தெரியும். எனவே, குறிப்பாக பொருளாதார சூழ்நிலையில், இதில் கவனமாக இருங்கள்…”