கடற்றொழில் அமைச்சு சவுதி அரேபிய அரசாங்கத்தின் ஒத்துழைப்பை பெற முயற்சி
கடற்றொழில்துறை அபிவிருத்திக்கு சவுதி அரேபிய அரசாங்கத்தின் ஒத்துழைப்புகளை பெற்றுக்கொள்வது தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தலைமையில் ஆராயப்பட்டுள்ளது.
கடற்றொழில் அமைச்சுக்கு, இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் விஜயம் மேற்கொண்ட போதே இந்த விடயம் தொடர்பாக ஆராயப்பட்டுள்ளது.
கலந்துரையாடப்பட்டுள்ள விடயங்கள்
கடற்றொழில், நீர்வேளாண்மை செயற்பாடுகளை நாடு முழுவதும் அபிவிருத்தி செய்யும் நோக்கில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஆலோசனைக்கமைய பல்வேறு திட்ட முன் வரைபுகள் தயார்படுத்தப்பட்டுள்ளன.
அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான ஒத்துழைப்புகளை சவுதி அரசாங்கத்திடமிருந்து பெற்றுக்கொள்வது தொடர்பாகவும் இதன்போது விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
இதன்போது, கடற்றொழில் அமைச்சின் செயலாளர் மற்றும் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமும் இராஜாங்க அமைச்சரின் செயலாளர்களும் கலந்துகொண்டுள்ளனர்.
முக்கிய செய்திகளை உங்களது கை தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள எம்முடன் இணையுங்கள் Join Now |