பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு

Ministry of Defense Sri Lanka
By Fathima Jan 01, 2026 08:30 AM GMT
Fathima

Fathima

தனிப்பட்ட பாதுகாப்புக்காக உறுதிப்பத்திரங்களுடன் வழங்கப்பட்டுள்ள துப்பாக்கிகளுக்கான உரிமம் புதுப்பிப்பு காலம் 2026 ஜனவரி 31 ஆம் திகதி  வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

மேலும் நிறுவனங்களுக்காக வழங்கப்பட்டுள்ள துப்பாக்கிகளுக்கும் குறித்த அறிவித்தல் பொருந்தும் என தெரிவிக்கப்படுகிறது.

தண்டனை

செப்டம்பர் 01, 2025 முதல் டிசம்பர் 31, 2026 வரை மட்டுமே உரிமம் புதுப்பித்தல் மேற்கொள்ளப்படும்.

பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு | Ministry Of Defense Announcement

அதன்படி, ஜனவரி 31, 2026 க்குப் பிறகு உரிமம் இல்லாமல் துப்பாக்கி வைத்திருப்பது துப்பாக்கி கட்டளைச் சட்டத்தின் பிரிவு 22 இன் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும் என்று பாதுகாப்பு அமைச்சின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள பேரிடர் சூழ்நிலை காரணமாக 2025 / 2027 ஆண்டுகளுக்கான தனியார் பாதுகாப்பு நிறுவனங்களின் பதிவைப் புதுப்பிப்பதும் ஜனவரி 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட காலத்தில் புதுப்பிக்கப்படாவிட்டால் தாமதக் கட்டணம் வசூலிக்கப்படுவதோடு சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.