இலங்கையின் தலையெழுத்தை மாற்றபோகும் தோடம்பழம்
இறக்குமதி செய்யப்பட்ட மெண்டரின் தோடம்பழ இனத்தை (Mandarin orange) பயிரிட மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சி வெற்றியளித்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
பதுளை, நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களின் தாழ்வான பகுதிகள் மெண்டரின் தோடம்பழ பயிர்ச்செய்கைக்கு உகந்தவை என அடையாளம் காணப்பட்டுள்ளதாக விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதியை புதிய பயிர்ச்செய்கை திட்டங்களின் விஸ்தரிப்புக்கு பயன்படுத்துவது தொடர்பாக விவசாய அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலில் இது தெரியவந்துள்ளது.
விவசாய அமைச்சரின் பணிப்புரை
இந்நிலையில் கண்டி, நுவரெலியா மற்றும் பதுளை மாவட்டங்களை அண்மித்த பகுதிகளில் செவ்வாழை பயிர்ச்செய்கை வலயத்தை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் விவசாயத்துறை அமைச்சர் மகிந்த அமரவீர அதிகாரிகளுக்கு பணிப்புரைவிடுத்துள்ளார்.
மேலும் இந்த பயிர்ச்செய்கைக்கு தேவையான நிதி ஒதுக்கீடுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.



