மாத்தறை சிறைச்சாலையில் மரக்கிளை உடைந்து விழுந்த சம்பவம்! இரண்டாமவரும் பலி
Matara
Sri Lanka
Sri Lankan Peoples
Death
By Rukshy
மாத்தறை சிறைச்சாலையில் கைதிகளின் தடுப்பு அறைகளின் மேலாக மரக் கிளையொன்று உடைந்து விழுந்த சம்பவத்தில் காயமடைந்த இன்னொரு கைதி உயிரிழந்துள்ளார்.
கடந்த முதலாம் திகதி இரவு மாத்தறை சிறைச்சாலையின் மத்தியில் உள்ள அரச மரத்தின் கிளையொன்று உடைந்து கைதிகளின் தடுப்பு அறைகளின் மீது விழுந்திருந்தது.
மருத்துவ சிகிச்சை
இதன்போது ஒருவர் உயிரிழந்து பதினொரு பேர் காயமடைந்திருந்தனர்.
தற்போது காயமடைந்தவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஏனைய கைதிகள் மருத்துவ சிகிச்சை பெற்றுக் கொண்டு மீண்டும் சிறைச்சாலைக்கு திரும்பியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |