பாசப்போராட்டத்தில் தாயை கொன்ற மகள்
தன்னை விட சகோதரி மீது அதிக அன்பு செலுத்திய வயதான தாயை மகள் கொலை செய்த சம்பவம் ஒன்று இந்தியாவில் இடம்பெற்றுள்ளது.
இதன்படி, இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த 71 வயதான பெண் ஒருவரே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
விசாரணை
இந்த நிலையில், உயிரிழந்த பெண்ணுக்கும் 41 வயதான அவரது இளைய மகளுக்கும் இடையே ஏற்பட்ட கடுமையான வாக்குவாதமே இறுதியில் கொலையில் முடிந்துள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த வன்முறை சம்பவத்தின் போது, குறித் தாய் வயிறு, மார்பு, கழுத்து மற்றும் பிற உடல் பாகங்களில் பலமுறை குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
தொடர்ந்தும், கொலையை மேற்கொண்ட பெண்ணை மகாராஷ்டிர பொலிஸார் கைது செய்துள்ளதுடன் மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |