முறிந்து விழும் அபாயத்திலுள்ளமரங்களை உடனடியாக அகற்றுங்கள்: பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் அறிவுறுத்தல்

Sri Lanka Politician Sri Lanka Sri Lankan Peoples
By Rakesh Oct 07, 2023 02:23 AM GMT
Rakesh

Rakesh

வீதியோரங்களில் முறிந்து விழும் அபாயத்தில் உள்ள பாரிய மரங்கள் தொடர்பில் உடனடியாக ஆய்வுகளை மேற்கொள்ளுமாறு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் ஆலோசனை வழங்கியுள்ளார்.

கொழும்பு -  கொள்ளுப்பிட்டியில் பஸ் ஒன்றின் மீது மரம் முறிந்து வீழ்ந்ததில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கருத்துத் தெரிவித்தபோதே, அவர் இந்த விடயங்களைத் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசு சர்வதேச விசாரணையை தவிர்க்க முடியாதது: சந்திரிகா பகிரங்கம்

இலங்கை அரசு சர்வதேச விசாரணையை தவிர்க்க முடியாதது: சந்திரிகா பகிரங்கம்

பாதுகாப்பு நடவடிக்கை

அத்துடன் மக்களுக்கு உயிராபத்தை ஏற்படுத்தும் மரங்களை உடனடியாக அப்புறப்படுத்துமாறு அவர் பணித்துள்ளார்.

முறிந்து விழும் அபாயத்திலுள்ளமரங்களை உடனடியாக அகற்றுங்கள்: பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் அறிவுறுத்தல் | Minister Of State For Defense Instructions

இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் மற்றும் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகத்தின் அதிகாரிகளுக்கு அவர் இந்த ஆலோசனையை வழங்கியுள்ளார்.

மேலும் மத்திய சுற்றாடல் அதிகார சபை, வீதி அபிவிருத்தி அதிகார சபை மற்றும் உள்ளூராட்சி மன்ற அதிகாரிகளையும் இந்த நடவடிக்கையில் இணைத்துக்கொள்ளுமாறு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

முறிந்து விழும் அபாயத்திலுள்ளமரங்களை உடனடியாக அகற்றுங்கள்: பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் அறிவுறுத்தல் | Minister Of State For Defense Instructions

சிகப்பு சீனி தொடர்பில் நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

சிகப்பு சீனி தொடர்பில் நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

அமைதிக்கான நோபல் பரிசை வெல்லும் ஈரானிய பெண்

அமைதிக்கான நோபல் பரிசை வெல்லும் ஈரானிய பெண்