இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு தொடர்பில் மீளாய்வு செய்யப்பட்டுள்ளது! கஞ்சன விஜேசேகர

Twitter Sri Lanka Minister of Energy and Power Kanchana Wijesekera
By Fathima Apr 13, 2023 05:52 PM GMT

இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் தொடர்பில் உரிய குழுவுடன் மீளாய்வு செய்யப்பட்டுள்ளதாக எரிசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

தனது டுவிட்டர் பக்கத்திலே இவ்வாறு தெரிவித்துள்ளார். 

உத்தேச புதிய மின்சார வாரிய சட்டத்தின் செயல்பாட்டு வரைவு மேம்பாட்டு முகவர், எரிசக்தி நிபுணர்கள் மற்றும் சட்ட ஆலோசகர்களுடன் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

குறித்த குழு இலங்கை மின்சார சபை மற்றும் அதன் பொறியியலாளர் சங்கத்தின் நிர்வாகத்தை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன், இலங்கை மின்சார சபையில் உள்ள ஏனைய தொழிற்சங்கங்களையும் இந்தக் குழு விரைவில் சந்திக்கவுள்ளதாக  அமைச்சர் தெரிவித்துள்ளார். 

அதன்படி, உத்தேச புதிய மின்சார சட்டத்தின் இறுதி வரைவு ஏப்ரல் மாத இறுதிக்குள் கிடைக்கும் என நம்புவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் தெரிவித்துள்ளார்.