இலஞ்சம் கோரும் சுகாதார அமைச்சர்: மருத்துவ அதிகாரிகள் மன்றம் குற்றச்சாட்டு
சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இலஞ்சம் கோருவதாகவும், இதனால் நாட்டின் சுகாதாரத் துறை வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் மன்றத்தின் தலைவர் ருக்ஷான் பெல்லன குற்றம் சுமத்தியுள்ளார்.
இது தொடர்பில் ருக்ஷான் பெல்லன மேலும் கூறியதாவது, சுகாதார பணிப்பாளர் நாயகம் தனது கடமைகளில் கலந்து கொள்வதை விட வெளிநாட்டுச் சுற்றுப்பயணங்களில் பங்கேற்பதில் அதிக கவனம் செலுத்தி வருகின்றார்.
இந்த ஆண்டு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு ஏழாவது சுற்றுப்பயணத்தை வழங்கும் அமைச்சரின் முயற்சியைத் நான் அம்பலப்படுத்தினேன்.
உலக சுகாதார அமைப்பின் இயக்குநரா..!
மேலும் கெஹலிய ரம்புக்வெல்ல, சில நாட்களாக அவர் காலையில் இலங்கையில் தரையிறங்குகிறார், மாலையில் அவர் மற்றொரு விமானத்தில் பறந்து கொண்டிருக்கிறார்.
அவர் இலங்கையின் சுகாதார சேவைகள் இயக்குநரா அல்லது உலக சுகாதார அமைப்பின் இயக்குநரா என்று நான் ஆச்சரியப்படுகிறேன் என மருத்துவர் பெல்லன தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |