5000 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ள தொழிலாளர்களின் தேசிய குறைந்தபட்ச ஊதியம்

Sri Lanka Economic Crisis Sri Lankan Peoples Economy of Sri Lanka
By Chandramathi Mar 27, 2024 03:41 AM GMT
Chandramathi

Chandramathi

தொழிலாளர்களின் தேசிய குறைந்தபட்ச வேதனத்தை உயர்த்தும் வகையில் அதற்குரிய சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.

இதன்படி, தொழிலாளர்களின் தேசிய குறைந்தபட்ச வேதனத்தை 12,500 ரூபாவில் இருந்து 17,500 ரூபாவாக உயர்த்தும் வகையில் அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.

தொழில் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கே இவ்வாறு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

5000 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ள தொழிலாளர்களின் தேசிய குறைந்தபட்ச ஊதியம் | Minimum Salary Amount Of Sri Lankans

தேசிய தொழிலாளர் ஆலோசனை

தேசிய தொழிலாளர் ஆலோசனை சபையின் விதந்துரைகளின் பிரகாரம் நியமிக்கப்பட்டுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சியாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கங்கள் மற்றும் தொழில் தருநர்களையும் உட்சேர்த்து முத்தரப்பு உபகுழுவொன்றின் மூலம் குறித்த வேதனத்தை 17,500 ரூபா வரை அதிகரிக்க விதந்துரைக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, குறைந்தபட்ச வேதனம் 12,500 ரூபாவிலிருந்து 17,500 ரூவா வரை 5,000 ரூபாவால் அதிகரிப்பதற்கும், குறைந்தபட்ச தேசிய நாளாந்த வேதனம் 500 ரூபாவில் இருந்து 700 ரூபாவாக அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் நாமல் வெளியிட்ட தகவல்

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் நாமல் வெளியிட்ட தகவல்