வாகரையில் மழையுடன் வீசிய மினி சூறாவளி: 12 வீடுகள் சேதம்
மட்டக்களப்பு (Batticaloa) வாகரை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கிருமிச்சை பிரதேசத்தில் மழையுடனான மினி சூறாவளி காற்றினால் பல மரங்கள் முறிந்து வீழ்ந்ததுடன் 12 வீடுகள் சேதமடைந்துள்ளன.
சீரற்ற காலநிலையினையடுத்து சம்பவதினமான நேற்று (04) மாலை 5 மணியளவில் திடீரென மழைபெய்ததுடன் மினி சூறாவளி காற்று வீசியுள்ளதாக வாகரை பிரதேச செயலாளர் ஏ.அருணன் தெரிவித்துள்ளார்.
சூறாவளி காற்று
இந்தநிலையில், பிரதேசத்திலுள்ள பல மரங்கள் முறிந்து வீழ்ந்ததுடன் வீடுகளின் கூரை ஒடுகள், தகரங்கள் என்பன தூக்கி வீசி எறிந்ததையடுத்து ஓடுகள் வீடுகளுக்குள் வீழந்து உடைந்துள்ளன.
இந்த மினி சூறாவளி காற்றினால் 12 வீடுகள் பகுதியளில் சேதமடைந்துள்ளதுடன் எவருக்கும் காயங்கள் ஏதும் ஏற்படவில்லை என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் |