கோடிக்கணக்கில் ஏலத்தில் விற்கப்பட்ட மிகப்பெரிய டைனோசர் படிமம்

United States of America New York
By Harrish Jul 18, 2024 08:39 AM GMT
Harrish

Harrish

அமெரிக்காவின் நியூயோர்க்கில் வரலாற்றில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய மற்றும் முழுமையான டைனோசர் படிமம் ஏலத்தில் விடப்பட்டுள்ளது.

அபெக்ஸ் (Apex) என பெயரிடப்பட்ட 150 மில்லியன் ஆண்டுகள் பழமையான இந்த படிமம் 11 அடி உயரமும் 27 அடி அகலமும் கொண்டது என தெரிவிக்கப்படுகின்றது.

44.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள்

இந்த டைனோசர் படிமம் அமெரிக்காவின் கொலராடோவில் உள்ள மோரிசன் என்ற பகுதியில் கடந்த 2022ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கோடிக்கணக்கில் ஏலத்தில் விற்கப்பட்ட மிகப்பெரிய டைனோசர் படிமம் | Millions Auctioned Dinosaur Skeleton Apex

இந்த நிலையில் ஏலத்தில் விடப்பட்ட அபெக்ஸ் எனப்படும் டைனோசர்  படிமம் 44.6 மில்லியன் அமெரிக்க டொலருக்கு ஏலத்தில் விற்கப்பட்டுள்ளது.

அத்துடன், டைனோசர் மாதிரி ஏலத்தில் விடப்படுவது இதுவே முதல் முறையாகும் என குறிப்பிடப்படுகின்றது.

இதேவேளை, 2020 ஆம் ஆண்டில் விற்கப்பட்ட டைரனோசொரஸ் ரெக்ஸ் என பெயரிடப்பட்ட டைனோசர் புதை படிவத்திற்கான ஏல விலைக்கான சாதனையையும் அபெக்ஸ் (Apex) முறியடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கோடிக்கணக்கில் ஏலத்தில் விற்கப்பட்ட மிகப்பெரிய டைனோசர் படிமம் | Millions Auctioned Dinosaur Skeleton Apex

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW