அஸ்வெசும குறித்து நலன்புரி நன்மைகள் சபை விடுத்த செய்தி
அஸ்வெசும முதல் கட்ட கொடுப்பனவுகள் டிசம்பர் மாதத்திற்குள் நிறைவடைய உள்ள நிலையில் இரண்டாம் சுற்றுக்கான விண்ணப்பம் தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
அஸ்வெசும இரண்டாம் சுற்றுக்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் ஏற்றுக்கொள்ளப்படும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
கொடுப்பனவு
அஸ்வெசும பயனாளிகள் எதிர்வரும் 15 ஆம் திகதிக்குள் செப்டம்பர் மாதக் கொடுப்பனவுகளை பெற்றுக்கொள்ள முடியும் என்றும், நவம்பர் மாத இறுதியில் ஒக்டோபர் மாதப் பணம் செலுத்தப்படும் என்றும் குறித்த சபை தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், அஸ்வெசும நிவாரணத் திட்டத்திற்கான விசேட வாரம் நாளை(06) ஆரம்பிக்கப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபையின் உறுப்பினர் கமல் பத்மசிறி தெரிவித்துள்ளார். எதிர்வரும் 11ஆம் திகதி வரை இது நடைமுறையில் இருக்கும்.