கோர விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாப உயிரிழப்பு

Puttalam Death
By Fathima Mar 18, 2024 05:13 AM GMT

புத்தளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்து புத்தளம் - கரம்பை பகுதியில் நேற்றுமுன்தினம் இடம்பெற்றுள்ளது.

விபத்தில் குறித்த பகுதியை சேர்ந்த முத்துத்தம்பி இராமநாதன் (வயது 42) எனும் இரண்டு பிள்ளைகளின் தந்தை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸார் மேலதிக விசாரணை

விபத்து தொடர்பில் மேலும் தெரியவருகையில், 

கோர விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாப உயிரிழப்பு | Men Death In Road Accident In Puttlam

உயிரிழந்த நபர் இரவு நேர சாப்பாடு எடுப்பதற்காக மோட்டார் சைக்கிளில் கரம்பை உள்வீதியில் இருந்து பிரதான வீதிக்கு சென்ற போது பாலாவியிலிருந்து நுரைச்சோலை நோக்கிப் பயணம் செய்த லொறியொன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளாகி உள்ளார்.

இந்த விபத்தில் படுகாயமடைந்த நபரை அங்கிருந்தவர்கள் உடனடியாக புத்தளம் தள வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்த போதிலும், அவர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மரண விசாரணையின் பின்னர் சடலம் அவரது மனைவியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்துச் சம்பவம் தொடர்பில் நுரைச்சோலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.