யாழில் தனியார் பேருந்து மற்றும் மோட்டார் சைக்கிள் மோதியதில் குடும்பஸ்தர் பலி
Sri Lanka Police
Jaffna
Jaffna Teaching Hospital
Accident
By Fathima
யாழில் தனியார் பேருந்து மற்றும் மோட்டார் சைக்கிள் மோதியதில் குடும்பஸ்தரொருவர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் - கோப்பாய் இராச வீதியில் நேற்று (10.09.2023) இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.
சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி சென்ற தனியார் பேருந்தொன்று மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
இதில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோப்பாயைச் சேர்ந்த எமில் ரவி என்ற 44 வயதான இரண்டு பிள்ளைகளின் தந்தையே
இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.