நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் பிணையில் விடுதலை
புதிய இணைப்பு
புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் இரண்டு இலட்சம் ரூபாய் சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
அவரை எதிர்வரும் ஜூலை மாதம் 22ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு புத்தளம் பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் கல்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அண்மையில் பிறப்பிக்கப்பட்ட பிடியாணைக்கு பதிலளிக்கும் வகையில், ரஹீம் இன்று (20) காலை கல்பிட்டி பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாகிய சிறிது நேரத்திலேயே இந்த கைது இடம்பெற்றுள்ளது.
நீதிமன்றத்தில் முன்னிலை
இந்நிலையில், அலி சப்ரி இன்று நீதிமன்றத்தில் முற்படுத்தப்படுவார் என அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
கடந்த ஆண்டு, கொழும்பில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கணிசமான அளவு அறிவிக்கப்படாத தங்கம் மற்றும் கையடக்க தொலைபேசிகளுடன் ரஹீம் பிடிபட்டமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |