புல்மோட்டை, குச்சவெளி், திரியாய் போன்ற பிரதேசங்களின் காணிப் பிரச்சினை சம்மந்தமாக ஜனாதிபதியுடனான சந்திப்பு.

Trincomalee Sri Lanka
By Nafeel Apr 27, 2023 03:01 PM GMT
Nafeel

Nafeel

புல்மோட்டை, குச்சவெளி், திரியாய் போன்ற பிரதேசங்களின் காணிப் பிரச்சினை சம்மந்தமாக ஜனாதிபதியுடனான சந்திப்பு.

புல்மோட்டை அரசிமலை,பொன்மலைக்குடா மற்றும் குச்சவெளி பிரதேச காணிகள் தொல்பொருள் திணைக்களத்தினால் அபகரிக்கப்பட்டு, வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு தீர்வை பெறுவதற்கான அதிமேதகு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களுடனான சந்திப்பு இன்று (27) இடம்பெற்றது. 

இச் சந்திப்பில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலைவர் கௌரவ றவூப் ஹக்கீம் (பா உ) மற்றும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம் எஸ் தௌபீக் உள்ளிட்ட குழுவினர் கலந்து கொண்டனர்.

இதன் போது, புல்மோட்டை அரசிமலை,பொன்மலைக்குடா மற்றும் குச்சவெளி பிரதேச காணிகள் தொல்பொருள் திணைக்களத்தினால் அபகரிக்கப்பட்டு வர்த்தமானி வெளியிடப்பட்ட விடயம் தொடர்பாக விரிவாக கலந்தாலோசிக்கப்பட்டது.

-MST Media Division

SineesKhan