முஸ்லிம் சமூகத்தின் சமகால அரசியல் வகிபாகம் மற்றும் கல்முனையின் எதிர்கால நகர்வுகள் தொடர்பாக பொதுக்கூட்டம்

Kalmunai
By Mayuri Aug 02, 2024 11:27 AM GMT
Mayuri

Mayuri

முஸ்லிம் சமூகத்தின் சமகால அரசியல் வகிபாகம் மற்றும் கல்முனையின் எதிர்கால நகர்வுகள் தொடர்பாக பொதுமக்களைத் தெளிவூட்டும் பொதுக்கூட்டம் நேற்று (01.08.2024) கல்முனை கடற்கரைப் பள்ளி முன்பாக இடம்பெற்றுள்ளது.

இக்கூட்டத்தில் பிரதான பேச்சாளராக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும், திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் உள்ளூராட்சி மாகாண சபைகள் இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் கலந்துகொண்டிருந்தார்.

அரச சேவையில் அனைத்து ஓய்வூதியர்களுக்கும் இடைக்கால கொடுப்பனவு

அரச சேவையில் அனைத்து ஓய்வூதியர்களுக்கும் இடைக்கால கொடுப்பனவு

உணர்வுபூர்வமாக உரையாற்றப்பட்ட விடயம்

இதன்போது அவர் தேசிய அரசியலில் முஸ்லிங்களின் வகிபாகம், ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நிலைப்பாடு, கல்முனை அரசியலில் இடம்பெறும் சதித்திட்டங்கள், அபிவிருத்தி திட்டங்களின் அடைவுகள், கிழக்கு மாகாண முஸ்லிங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், கடந்த அரசாங்கத்தில் முஸ்லிங்கள் சந்தித்த சவால்கள், ஜனாஸா எரிப்பின் மூலம் சந்தித்த சவால்கள், கல்முனை முஹையத்தீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசலின் புதிய நம்பிக்கையாளர் நியமனம் என பல்வேறு பட்ட முக்கிய விடயங்களை உணர்வுபூர்வமாக உரையாற்றினார்.

திருகோணமலையில் பாடசாலை மாணவி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழப்பு

திருகோணமலையில் பாடசாலை மாணவி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழப்பு

மேலும், இக்கூட்டத்தில் கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர்களான ஏ.ஆர்.அமீர், எம்.ஏ. கலீலுர் ரஹ்மான் ஆகியோரும் உரையாற்றியதுடன் கல்முனை மாநகர சபை முன்னாள் பிரதிமேயர் ஏ.ஏ.பஷீர், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் உயர் பீட உறுப்பினர்கள், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் கல்முனை மத்தியகுழு உறுப்பினர்கள் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் முக்கியஸ்தர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

GalleryGalleryGallery