அதிபர் ரணில் இளம் பிரதிநிதிகளுடன் சந்திப்பு

Ranil Wickremesinghe Sri Lanka Sri Lankan Peoples
By Fathima Jun 01, 2024 08:12 AM GMT

அதிபர் ரணில் விக்ரமசிங்க மற்றும் இளம் பிரதிநிதிகளுக்கு இடையிலான சந்திப்பொன்று நடைபெற்றது.

குறித்த சந்திப்பு அதிபரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் கடந்த 30 ஆம் திகதி இடம்பெற்றது.

அதிபர் செயலகத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டு வரும் இளையோரின் பங்கேற்புடனான நிகழ்வுகளின் ஒரு அங்கமாக “இளையோர் கலந்துரையாடல் – நாளை இலங்கையின் இளம் தலைவர்கள்” என்ற தொனிப்பொருளின் கீழ் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பொருளாதார மறுசீரமைப்பு

அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் புதிய பொருளாதார மறுசீரமைப்பு மற்றும் சீர்த்திருத்த முயற்சிகள் தொடர்பில் இங்கு கலந்துரையாடப்பட்டது.

 இலங்கையின் வெற்றிகரமான எதிர்கால பயணத்திற்கு இளையோரின் பங்களிப்பு மிக முக்கியமானது என்றும் அதிபர் ரணில் விக்ரமசிங்க இதன்போது வலியுறுத்தினார்.

அதிபர் ரணில் இளம் பிரதிநிதிகளுடன் சந்திப்பு | Meeting Ranil Wickramasinghe And Representatives

இளையோர் எழுப்பிய கேள்விகளுக்கு பதில்களை வழங்கிய அதிபர், எதிர்கால சிறிலங்காவை கட்டியெழுப்புவதற்கான இளைஞர்களின் முயற்சிக்கும் பாராட்டு தெரிவித்தார்.

தேசிய பாதுகாப்பு தொடர்பான அதிபரின் சிரேஷ்ட ஆலோசகரும் அதிபர் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, காலநிலை மாற்றம் தொடர்பிலான அதிபரின் சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜேவர்தன, சர்வதேச அலுவல்கள் தொடர்பிலான அதிபரின்  பணியாளர் தினுக் கொலம்பகே, இளைஞர் சேவை மன்றத்தின் தலைவர் / பணிப்பாளர் பசிந்து குணவர்தன உள்ளிட்ட பலரும் இதன்போது கலந்துகொண்டிருந்தனர்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery