இந்திய -இலங்கை காவல்படைகளின் பிரதிநிதிகளுக்கு இடையிலான சந்திப்பு
இந்திய மற்றும் இலங்கை கடற்படைகள் மற்றும் கடலோர காவல்படைகளின் பிரதிநிதிகளுக்கு இடையிலான வருடாந்த சந்திப்பின் 33 வது பதிப்பு இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பு இந்தியாவின் சுமித்ரா கப்பலில் நேற்று முன்தினம், இந்திய - இலங்கை கடல்சார் எல்லைக் கோட்டு பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இரு நாடுகளின் தொடர்புகள்
இதன்போது இரு நாடுகளின் சகாக்களுக்கு இடையிலான தொடர்புகள், அத்துடன்; மன்னார் வளைகுடா பகுதியில் கடல் பாதுகாப்பு, கடற்றொழிலாளர்களின் பாதுகாப்பு, கடத்தலை தடுக்கும் நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைகள் நடத்தப்பட்டுள்ளன.
கடலோர காவல்படை பிராந்திய தலைமையகத்தின் பிரதிநிதிகள், கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் இரு நாடுகளின் மூத்த அதிகாரிகளும் இதில் கலந்து கொண்டனர்.