ஜப்பான் தூதரக அதிகாரிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் சந்திப்பு
ஜப்பான் தூதரக அதிகாரிகளுக்கும்- பிராந்திய ஊடகவியலாளருக்கும் இடையிலான சந்திப்பு திருகோணமலையில் இடம்பெற்றது.
நேற்று (18) திருகோணமலை - அலஸ்தோட்டம் லோட்டஸ் பாக் ஹோட்டலில் இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
திருகோணமலையின் தற்போதைய நிலவரம், மக்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள், இனங்களுக்கு இடையிலான தொடர்புகள் குறித்தும் ஆராயப்பட்டது.
ஊடகவியலாளர்களின் நிலைமை
இக்கலந்துரையாடலில் ஜப்பான் தூதரக ஆராய்ச்சியாளரும், ஆலோசகருமான Kana Moriwaki மற்றும் தூதரக அதிகாரியின டி.பாலகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அத்துடன் இக்கலந்துரையாடலின் போது ஜப்பான் ஊடகவியலாளர்கள் செயற்படும் விதம் குறித்தும் தற்போது இலங்கையில் வசித்து வரும் ஊடகவியலாளர்களின் நிலைமை தொடர்பிலும் தெளிவுபடுத்தப்பட்டது.
மேலும் எதிர்காலத்தில் ஊடகவியலாளர்களின் நலன் கருதி ஜப்பான் தூதரக உதவியுடன்
பயிற்சி செயலமர்வுகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை
விடுக்கப்பட்டதாகவும் திருகோணமலை மாவட்ட பிராந்திய ஊடகவியலாளர் அப்துல்சலாம்
யாசீம் தெரிவித்தார்.