முன்னாள் ஆளுநர் ஹிஸ்புழ்ழாஹ் மற்றும் செந்தில் தொண்டமானுக்கு இடையில் சந்திப்பு(Photos)
முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி ஹிஸ்புழ்ழாஹ் மற்றும் தற்போதைய கிழக்கு
மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஆகியோர்களுக்கிடையிலான சந்திப்பு நேற்று(22)
திருகோணமலை ஆளுநர் காரியாலத்தில் இடம்பெற்றது.
இந்த சந்திப்பில் கிழக்கு மாகாண கல்வி அபிவிருத்தி தொடர்பாகவும் கிழக்கு மாகாண ஏனைய அபிவிருத்தி தொடர்பாகவும் கலந்துரையாடல் இடம்பெற்றது.
மேலும், அண்மையில் மட்டக்களப்பு மத்தி கல்வி வலையத்தில் காத்தான்குடி பிரதேச கல்வி பணிப்பாளராக நியமிக்கப்பட்ட பின்னர் ஏற்பட்ட பிரச்சினைகள் தொடர்பாக ஆளுநர் கவனத்திற்கு கொண்டுவந்து அது தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்று இறுதி தீர்மானம் எடுக்கப்பட்டது.
எதிர்காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெறும் அபிவிருத்தி தொடர்பாக சகல ஒத்துழைப்புக்களை வழங்குவதாக ஆளுநர் தெரிவித்தார்.
இக்கலந்துரையடலில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், ஶ்ரீலங்கா ஹிரா
பொளண்டேஸன் செயலாளர் நாயகம் அஷ்ஷெய்க் மும்தாஸ் மதனி , மட்டக்களப்பு மத்தி
வலயக்கல்வி பணிப்பாளர் அமீர், காத்தான்குடி பிரதேச கல்வி பணிப்பாளர் ஹக்கீம் ,
முன்னாள் காத்தான்குடி பிரதேச கல்வி பணிப்பாளர் கலாவூத்தீன் , காத்தான்குடி
பாத்திமா பாலிகா வித்தியாலய அதிபர் யூனூஸ் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.