இலங்கையின் மருந்து உற்பத்தியில் முதலீடு செய்ய கியூபா ஆதரவு

Sri Lanka Cuba Harini Amarasuriya
By Laksi Oct 16, 2024 10:28 AM GMT
Laksi

Laksi

இலங்கையின் மருந்து உற்பத்தியில் கியூபா அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக இலங்கைக்கான கியூபா தூதுவர் அன்த்ரேஸ் மாசெர்லோ கொன்சாலெஸ் கொரிடோ தெரிவித்துள்ளார்.

பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவிற்கும், கியூபா தூதுவருக்கும் இடையில் பிரதமர் அலுவலகத்தில் நேற்று (15) மாலை இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போதே தூதுவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது, இலங்கைக்கும் கியூபாவுக்கும் இடையிலான சுமார் 65 வருட கால இராஜதந்திர உறவை மேலும் வலுப்படுத்துதல், கியூபா உதவியின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்ட நிறுத்தப்பட்ட கொசு ஒழிப்புத் திட்டங்களை மீள ஆரம்பிப்பது, இலங்கையில் உள்ள பயிற்சி நிலையங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு மருத்துவம் மற்றும் விளையாட்டுக் கல்விக்கான புலமைப்பரிசில்களை வழங்குதல் போன்ற பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை: பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை: பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

கியூபாவின் தொடர்ச்சியான ஆதரவு

அத்தோடு, கடந்த சில வருடங்களில் கியூபா பொருளாதார ரீதியாக சவால்களை எதிர்கொண்ட போதிலும், கியூபாவின் தொடர்ச்சியான ஆதரவிற்கு தனது நன்றியைத் தெரிவித்த பிரதமர், கியூபா பிரதமருக்கு இலங்கை விஜயம் செய்ய உத்தியோகபூர்வ அழைப்பை விடுத்துள்ளார்.

இலங்கையின் மருந்து உற்பத்தியில் முதலீடு செய்ய கியூபா ஆதரவு | Meet With Prime Minister Ambassador Of Cuba

இந்த கலந்துரையாடலில் பிரதமரின் செயலாளர் பிரதீப் சப்புதந்த்ரி, பிரதமரின் மேலதிக செயலாளர் மஹிந்த குணரத்ன உள்ளிட்ட அதிகாரிகளும், கியூபா அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தி சிரேஷ்ட அதிகாரிகள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இணையவழி பண மோசடி : பல வெளிநாட்டு பிரஜைகள் கைது

இணையவழி பண மோசடி : பல வெளிநாட்டு பிரஜைகள் கைது

கிணற்றிலிருந்து பெண்ணொருவரின் சடலம் மீட்பு

கிணற்றிலிருந்து பெண்ணொருவரின் சடலம் மீட்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW