நாட்டில் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்
இலங்கையில் நுளம்புகளால் பரவக்கூடிய நோய்களின் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதன்படி, அம்மை, டெங்கு மற்றும் இன்ஃப்ளூவன்ஸாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
அதேவேளை, மழையுடன் நுளம்புகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் டெங்கு மற்றும் சிக்கன் குனியா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் வைத்தியசாலையின் குழந்தைகள் நல மருத்துவர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
நோய் தொடர்பில் தெளிவான விளக்கம்
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
டெங்கு காய்ச்சலைப் போன்ற அறிகுறிகளைக் கொண்ட ஏடிஸ் எஜிப்டி நுளம்பு இனத்தால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். இந்த நோயின் முக்கிய அறிகுறிகள் அதிக காய்ச்சல், மூட்டு வலி, தோல் கருமையாக மாறுதல் மற்றும் சொறி போன்ற பாதிப்புக்கள் ஏற்படும்.
இதற்கிடையில், இந்த நாட்களில் இன்ஃப்ளூவன்ஸா நோயாளர்களின் எண்ணிக்கையும் வேகமாக அதிகரித்துள்ளது. இந்நிலையில், இருமல், காய்ச்சல் அல்லது சளி இருந்தால் முகக்கவசம் அணிய வேண்டும்.
இரத்தப் பரிசோதனை
மூன்று நோய்களின் அறிகுறிகளும் ஒரே மாதிரியாக இருப்பதால், இரத்தப் பரிசோதனைகள் மற்றும் அன்டிஜென் பரிசோதனைகள் மூலம் நோய்களை அடையாளம் காண வேண்டும்.
இந்த மூன்று நோய்களில் ஏதேனும் ஒன்றுக்கு நீங்கள் ஆளாகியிருந்தால், உடனடியாக மருத்துவரிடம் சிகிச்சை பெற வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |