குழந்தைகள் மத்தியில் வேகமாக பரவும் நோய்: வெளியான காரணம்
நாட்டில் தற்போது குழந்தைகள் மத்தியில் தட்டம்மை நோய் வேகமாக பரவி வருவதாக ரிட்ஜ்வே ஆர்யா சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் டொக்டர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
குழந்தைகள் மத்தியில் தட்டம்மை நோய் பரவி வருவதற்கு தட்டம்மை தடுப்பூசி பொடாமையே காரணம் என விசேட வைத்திய தெரிவித்துள்ளார்.
தட்டம்மை தடுப்பூசி
சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர், 12 சிறுவர்கள் இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
காய்ச்சல் மற்றும் சிவப்பு புள்ளிகள் இந்த நோயின் அறிகுறிகளில் என்றும், இந்த நோயின் ஆபத்துகள் குறித்து மக்கள் சரியாக அறிந்திருக்கவில்லை என்றும் மருத்துவர் கூறினார்.
தட்டம்மை தடுப்பூசி போடப்படாத குழந்தைகளே இந்நோயினால் அதிகம் பாதிக்கப்படுவதாகத் குறிப்பிட்டுள்ளார்.