நிந்தவூர் காசிபூல் உலூம் அரபுக் கல்லூரிக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

Ampara Climate Change Eastern Province Law and Order
By Laksi Dec 03, 2024 10:27 AM GMT
Laksi

Laksi

மாவடிப்பள்ளி பிரதேசத்தில் கடந்த வாரம் இடம்பெற்ற அனர்த்ததுடன் தொடர்புடைய நிந்தவூர் காசிபூல் உலூம் அரபுக் கல்லூரிக்கு புதிய நிர்வாக சபையொன்றினை நியமிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

குறித்த உத்தரவானது நேற்று (2) சம்மாந்துறை நீதவான் நீதிமன்றினால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த அரபுக் கல்லூரியின் தற்போதைய நிர்வாக சபையினை கலைத்து விட்டு புதிய நிர்வாக சபையினை உடனடியாக நியமிக்குமாறு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்திற்கு நீதவான் டி. கருணாகரன் உத்தரவிட்டுள்ளார்.

கிழக்கில் மண் அகழ்வதற்கு விதிக்கப்பட்ட தற்காலிக தடை

கிழக்கில் மண் அகழ்வதற்கு விதிக்கப்பட்ட தற்காலிக தடை

பிணையில் விடுதலை 

மாவடிப்பள்ளி பிரதேசத்தில் கடந்த 26ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற அனர்த்தம் காரணமாக குறித்த அரபுக் கல்லூரியின் ஆறு மாணவர்கள் உட்பட எட்டுப் பேர் உயிரிழந்துள்ளனர்.

நிந்தவூர் காசிபூல் உலூம் அரபுக் கல்லூரிக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு | Mavadipalli Tractor Accident Issue

இதனையடுத்து குறித்த அரபுக் கல்லூரியின் அதிபர் மற்றும் விரிவுரையாளர் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.

இதில் அதிபர் மற்றும் விரிவுரையாளர் ஆகியோர் டிசம்பர் 02 திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டதுடன் ஏனைய இவரும் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர்.

10ஆவது நாடாளுமன்றத்தின் விவாத அமர்வு இன்று - Live

10ஆவது நாடாளுமன்றத்தின் விவாத அமர்வு இன்று - Live

உத்தரவு

இவ்வாறான நிலையில் குறித்த அனர்த்தம் தொடர்பான விசாரணைகள் திங்கட்கிழமை (02) சம்மாந்துறை நீதவான் டி. கருணாகரன் முன்னிலையில் இடம்பெற்றுள்ளதுடன் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிந்தவூர் காசிபூல் உலும் அரபுக் கல்லூரியின் அதிபர் மற்றும் விரிவுரையாளர் ஆகியோர் இரண்டு இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர்.

நிந்தவூர் காசிபூல் உலூம் அரபுக் கல்லூரிக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு | Mavadipalli Tractor Accident Issue

மேலும் இந்த வழக்கு விசாரணைகள் முடிவடையும் வரை குறித்த அரபுக் கல்லூரியின் அதிபர் மற்றும் விரிவுரையாளர் ஆகியோர் அரபுக் கல்லூரிக்கு செல்லக்கூடாது எனவும் நீதவான் உத்தரவு பிறப்பித்தார்.

குறித்த விசாரணையின் போது காரைதீவு பிரதேச செயலாளர் மாவட்ட அனர்த்தன நிவாரண சேவைகள் அதிகாரி ஆகியோரும் விசாரணையின் போது மன்றில் முன்னிலையாகி இருந்தனர்.

குறித்த வழக்கினை நீதிவான் எதிர்வரும் 16ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதுடன் நீர்ப்பாசனத் திணைக்களம் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகாரசபையினரையும் அடுத்த தவணையின் போது மன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சாய்ந்தமருது பிரதேசத்தில் நுளம்புகள் பெருகாத வண்ணம் புகை விசிறல் நடவடிக்கை !

சாய்ந்தமருது பிரதேசத்தில் நுளம்புகள் பெருகாத வண்ணம் புகை விசிறல் நடவடிக்கை !

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW