மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த கணித ஆசிரியர் கைது
Sri Lanka Police
Child Abuse
Crime
Sri Lankan Schools
By Fathima
பாடசாலை மாணவியொருவரைப் பாலியல் வன்கொடுமை செய்த மேலதிக வகுப்பு ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வத்தேகம பகுதியில் அமைந்துள்ள தனியார் வகுப்பறையில் நீண்ட நாட்களாக குறித்த மாணவியை ஆசிரியர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி வந்துள்ளமை தெரியவந்துள்ளது.
பொலிஸார் நடவடிக்கை
44 வயதுடைய கணித பாடம் கற்பிக்கும் ஆசிரியரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள ஆசிரியரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப் பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.