ஈஸ்டர் தாக்குதலின் முக்கிய சூத்திரதாரி: மைத்திரி வெளியிட்ட தகவல்
2019 உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புக்குப் பின்னணியில் உள்ள பிரதான சூத்திரதாரியை இலங்கையால் எதிர்கொள்ள முடியாது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இலங்கை மன்றத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அந்த நபர், அனைத்து அரசாங்கங்களுக்கும், இராணுவம் மற்றும் புலனாய்வு அமைப்புகளுக்கும் நன்கு தெரிந்தவர் என்றும், ஆனால் அவரை எதிர்கொள்வதற்கு சாத்தியமற்றது என மைத்தரி கூறியுள்ளார்.
அனைவரும் அறிந்திருக்கும் சூத்திரதாரி
இது குறித்தும் தொடர்ந்தும் அவர் கூறுகையில், “இதெல்லாம் எப்படி நடந்தது என்பது பற்றி நான் சிஐடியிடம் எல்லாவற்றையும் கூறிவிட்டேன். ஆனால் அதில் எதையும் பொதுமக்களுக்கு வெளிப்படுத்த முடியாது.
மூளையாகச் செயல்படுபவர் என்று அழைக்கப்படுபவரைக் கண்டுபிடிக்க அனைவரும் துடிக்கிறார்கள், ஆனால் உண்மை என்னவென்றால் - அது யார் என்பது அவர்களுக்கு ஏற்கனவே தெரியும்.
ஒவ்வொரு அரசாங்கமும், இராணுவமும், புலனாய்வு நிறுவனமும் அறிந்திருக்கிறது, மூளையாகச் செயல்பட்டவர் எங்கே என்று நம்மால் சொல்ல முடிந்தாலும் அவரை நாம் எதிர்கொள்ள முடியாது” என அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |