ஈரானின் ஜனாதிபதி தேர்தலில் மசூத் பெசெச்கியன் வெற்றி
ஈரானின் இதய அறுவை சிகிச்சை நிபுணரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மசூத் பெசெச்கியன்(Pezeshkian) நாட்டின் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்.
போட்டியாளரான சயீத் ஜலிலியை வீழ்த்தி அவர் இந்த வெற்றியை பெற்றுள்ளார்.
உத்தியோகபூர்வ எண்ணிக்கையின்படி, பெசெச்கியன் ( 53.7 சதவீத வாக்குகள் அல்லது 16.3 மில்லியன்) வாக்குகளைப் பெற்றார்.ஜலிலி 44.3 சதவீதம் அல்லது 13.5 மில்லியன் பெற்றுள்ளார்.
வெற்றிக் கொண்டாட்டங்கள்
பெசேச்கியானின் ஆதரவாளர்கள், அவரது வெற்றிக் கொண்டாட்டங்களை தெஹ்ரான் மற்றும் ஏனைய நகரங்களில் அதிகாலையிலேயே ஆரம்பித்துள்ளனர்.
முன்னதாக கடந்த மே மாதம் உலங்கு வானூர்தி விபத்தில் அப்போதைய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் வெற்றிடத்துக்காக இடம்பெற்ற திடீர் தேர்தலில் 60 சதவீதத்திற்கும் அதிகமான ஈரானிய வாக்காளர்கள் வாக்களிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |