பொத்துவில் பிரதேசமெங்கும் முஷாரபுக்கு பாரிய எதிர்ப்பு
இம்முறை நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் தற்போது சூடுபிடித்துள்ள நிலையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். எம். எம். முஷாரபுக்கு பொத்துவில் பிரதேசமெங்கும் பாரிய எதிர்ப்பலைகள் எழும்பியுள்ளது.
இம்முறை தேர்தலில் போட்டியிடும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முஷாரப் மக்கள் சந்திப்பு நிகழ்வொன்றில் கலந்துகொள்வதற்காக செல்லும்போது அப்பிரதேச பொதுமக்களினால் விரட்டியடிக்கப்பட்ட சம்பவம் (23) இடம்பெற்றுள்ளது.
மக்களின் ஆதங்கம்
மதுபானசாலைக்கு அனுமதிப் பத்திரம் பெற்றுக்கொடுத்து பணம் பெற்றமை, பொத்துவில் பெரிய பள்ளிவாயலில் பொய் சத்தியம் செய்தமை, குழந்தை எரிப்புக்கு ஆதரவு கொடுத்தமை, முக்கியமான விடயங்களுக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுக்காமல் ஏமாற்றம் செய்தமை போன்ற செயற்பாடுகளை செய்துள்ளார் என்ற குற்றச்சாட்டுக்கள் முஷாரப் மீது வைக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து அவர் செய்த அந்த செயலை ஒருநாளும் எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது என்று மக்கள், அவருக்கெதிராக பாரிய எதிர்ப்புக்களை பொத்துவில் பிரதேசமெங்கும் நாளுக்குநாள் கூட்டிக்கொண்டே செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |