யாழில் பாரிய கொள்ளை: அதிர்ச்சியில் குடும்பத்தினர்

Jaffna Sri Lanka Sri Lanka Police Investigation
By Fathima Nov 05, 2023 08:54 AM GMT
Fathima

Fathima

யாழ்ப்பாணம் - இணுவில் பகுதியில் வீடொன்றில் 135 பவுணுக்கும் அதிகமான தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, இணுவில், மஞ்சத்தடி பகுதியில் உள்ள வீடொன்றிலேயே இத்திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த வீட்டில் அந்தியேட்டி கிரியை நடைபெறவிருந்த நிலையிலேயே குறித்த திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பொலிஸ் விசாரணை

இன்று அதிகாலை மூன்று மணியளவில் சமையல் வேலைக்காக எழுந்த குடும்பத்தினர் சார்ஜ் போடுவதற்கு கையடக்க தொலைபேசியை தேடிய பொழுது அலுமாரி மற்றும் கதவு திறந்த நிலையில் நகைகள் காணாமல் போயுள்ளன.

சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

யாழில் பாரிய கொள்ளை: அதிர்ச்சியில் குடும்பத்தினர் | Massive Gold Robbery In Jaffna

அந்த குடும்பத்துடன் தொடர்புடைய யாரோ அல்லது இரகசியமாக நுழைந்த யாரோ திருட்டில் ஈடுபட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.

சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாண பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவு மற்றும் கோப்பாய் பொலிஸார் ஆகியோர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.