காற்றாலை திட்டத்தில் பாரிய மோசடி

Sajith Premadasa Sri Lanka Economy of Sri Lanka
By Raghav Jun 28, 2024 08:27 PM GMT
Raghav

Raghav

மன்னார் (Mannar) பிரதேசத்தில் 500 மெகாவாட் காற்றாலை புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டத்தை அமைக்க அரசாங்கம் எட்டிய உடன்படிக்கையையடுத்து, போட்டித் தன்மை வாய்ந்த விலைமனு கோரல் இன்றி மன்னார் காற்றாலை மின் உற்பத்தியின் அலகொன்றை 8.26 டொலருக்கு கொள்வனவு செய்யும் ஒப்பந்தத்துக்கு வருவதற்கு அரசாங்கம் உடன்பாட்டை தெரிவித்துள்ளது.

போட்டி முறையில் அமைந்த விலைமனு கோரலுக்குச் சென்றால் குறைந்த தொகையில் பெற முடியும் என்று ஐக்கிய மக்கள் சக்தி தமது நிலைப்பாட்டை பல முறை தெரிவித்துள்ளது. இது எதனையும் பொருட்படுத்தாமல் அரசாங்கம் செயற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

50 மெகாவாட் மின் உற்பத்தி நிலையத்திற்கான விலைமனு கோரலை போட்டி மிகு விலைமனு ஊடாக மின்சார சபை கோர தீர்மானித்திருந்தாலும், அந்த விலைமனு இதுவரை கோரப்படவில்லை.

மின்சார சபை

இந்தச் சட்ட விரோத ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதே இதற்கு காரணமாக அமைந்துள்ளது. நேற்று முன்தினம் மின்சார சபையின் 50 மெகாவாட் திட்டத்துக்கான போட்டி மிகு விலைமனு அறிவிக்கப்பட்டுள்ளன.

காற்றாலை திட்டத்தில் பாரிய மோசடி | Massive Fraud In Wind Project

50 மெகாவாட்டின் அலகொன்றின் கொள்வனவு விலை 4.8 அமெரிக்க டொலர்கள் ஆகும். போட்டி மிகு விலைமனு இல்லாமல் போன 500 மெகாவாட் காற்றாலை மின் உற்பத்தியின் அலகொண்றின் கொள்வனவு விலை 8.26 டொலர்களாக அமைந்து காணப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் இங்கு சுட்டிக்காட்டினார்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW