மருதமுனை ஊடக பேரவையின் தொடங்குகை நிகழ்வு (photos)
மருதமுனை ஊடக பேரவையின் தொடங்குகை நிகழ்வும், இப்தாரும் நிகழ்வும் இடம்பெற்றுள்ளன.
இந்த நிகழ்வு நேற்று (20.04.2023) அல்-மனார் மத்திய கல்லூரியின் பெண்கள் பிரிவில் பேரவையின் ஸ்தாபகர் கலாபூஷணம் பி.எம்.எம்.ஏ.காதர் தலைமையில் இடம்பெற்றது.
மருதமுனை சிரேஷ்ட ஊடகவியலாளர் எம்.எல்.எம். ஜமால்டீன் தலைவராகவும் ,ஜெஸ்மி எம்.மூஸா பொதுச் செயலாளராகவும், ஏ.எல்.எம். ஷினாஸ் பொருளாளராகவும், தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் பிரதித் தலைவர், உப தலைவர்கள், தவிசாளர், பிரதிச் செயலாளர், அமைப்பாளர், ஊடக இணைப்பாளர், கணக்காய்வாளர் அடங்கலாக நிருவாகக் குழு உறுப்பினர்களாக பதின்மரும் ஏகமானதாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இப்தாரும் நிகழ்வு
நிகழ்வில் ஸ்தாபகரும் பிரதித் தலைவருமான கலாபூஷணம் பி.எம்.எம்.ஏ.காதர், தலைவர் எம்.எல்.எம்.ஜமால்டீன், பொதுச் செயலாளர் ஜெஸ்மி எம்.மூஸா, பொருளாளர் ஏ.எம்.ஷினாஸ், தவிசாளர் சிரேஷ்ட ஒலி-ஔிபரப்பாளர் ஊடக வித்தகர் இஸ்மாயில் பீ.மஆரிப், உபதலைர்களான பிறை எப்.எம்.கட்டுப்பாட்டாளர் பஸீர் அப்துல் கையூம், சிரேஷ்ட அறிவிப்பாளர் ஏ.முகம்மட் அன்சார், சட்ட ஆலாசகர் சபை உறுப்பினர் கல்முனை சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் றைசுல் ஹாதி, போசகர் சபை உறுப்பினர் ஐ.ஏ.பரீட், பிரதிச் செயலாளர் ஏ.ஆர்.ஏ.நபாயிஸ் ஆகியோரும் நிகழ்வில் கருத்துரை வழங்கினர்.
தலைவர், செயலாளர், பொருளாளர் ஆகியோருக்கான ஆவணங்களும் நிகழ்வில் கையளிக்கப்பட்டதுடன் மருதமுனை ஊடக பேவையின் பின்வரும் நிருவாகிகள் ஏகமானதாக தெரிவு செய்யப்பட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.






